அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் புகழ் பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகத்தினர் தனியார் பங்களிப்புடன் கூடுதல் மின் விளக்கு பொருத்தி உள்ளனர்.
கோவிலில் சண்முகநாதர், திருமுருக நாதர், அம்பாள், ஆகிய மூன்று தெய்வங்களுக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் ஒவ்வொறு கோபுரங்களுக்கும் ஆயிரத்து 200 வாட்ஸ் பவர் கொண்ட நான்கு வீதம் மூன்று கோபுரங்களும் 12 மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் வாளாகம் மற்றும் உட்புறம், வெளி புறங்களிலும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. 50 முதல் நூறு வாட்ஸ் பவர் கொண்ட எல்.இ.டி லைட் கோவில் உள் பகுதியில் 50, வளாகத்தில் 50, வளாக வெளியில் நூறு என 200 மின் விளக்கு பொருத்தப் பட்டுள்ளது.