பதிவு செய்த நாள்
06
ஜூன்
2012
10:06
புளியரை: இலத்தூர் சங்கர விநாயகர் கோயிலில் வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. தென்காசி அருகே உள்ள இலத்தூர் சங்கர விநாயகர் கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் வரும் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (7ம் தேதி) விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசகம், எஜமானர் அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், கோ பூஜை, வேதபாராயணம், தேவாரம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலை தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சாந்தி பிரவேசபலி, ம்ஸத்சங்கிரணம், பாலிகாஸ்தாபனம், ரக்ஷாபந்தனம், எஜமானர் ஆச்சார்ய வர்ணம், கும்ப அலங்காரம் கலாகர்ஷனம், கடஸ்தாபனம், யாத்ரா ஹோமத்துடன் கும்பங்கள் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, வேதபாராயணம், தீபாராதனை நடைபெறும். இரவு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம் சமர்ப்பணம் நடக்கிறது.
வரும் 8ம் தேதி அதிகாலை மூர்த்திக்கு ரக்ஷாபந்தனம், பிம்பசுத்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹபர்ஷாகுதி, நாடிசந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், காலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கும்பங்கள் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து விமானம் மற்றும் சங்கர விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேக யாகசாலை பூஜைகளை சிவஆகம முறைப்படி ஸர்வஸாதகம் சத்யோகஜாதசிவம் அழகியநாயகி அம்பாள் கோயில் குருக்கள் குமார் மற்றும் சாத்தான்குளம், சத்திரபப்ட்டி பகுதிகளில் இருந்து அர்ச்சகர்கள் பூஜைகளை நடத்துகின்றனர்.ஏற்பாடுகளை சங்கரவிநாயகர் கோயில் பக்தர்கள் குழு மற்றும் கவுரவ ஆலோசகர் தொகுதி கழக இணைச் செயலாளரும், மாவட்ட ஆதிதிராவிட உறுப்பினரும், செங்கோட்டை யூனியன் சேர்மன் எல்ஐசி முருகையா உட்பட பலர் செய்து வருகின்றனர்.