தியாகதுருகம் - சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நாளை நடக்கிறது.தியாகதுருகம் அடுத்த சித்தலுார் மணிமுக்தா ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடக்கவில்லை. இந்தாண்டு திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 11 ம் தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.தினமும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நாளை (19 ம் தேதி) காலை 7:00 மணிக்கு மயான கொள்ளை திருவிழா நடைபெறுகிறது. நாளை மறுநாள் தேர் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.