திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே வேலங்குடி சாம்பிராணி வாசகர் உறங்காப்புளி கருப்பர் கோயிலில் மார்ச் 8ல் காப்புக்கட்டி விழா துவங்கியது.
தொடர்ந்து மறுநாள் சாமி அரிவாளில் ஆடி கப்பரை நடந்தது. தொடர்ந்து கருப்பருக்கு விரதமிருந்து அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அடுத்து மகாசிவாராத்திரி,பாரி வேட்டை வழிபாடு நடந்தது. நேற்று முதல் திருவிழாவை முன்னிட்டு அங்காளம்மன் கோயில் உற்ஸவ அம்மன் பச்சைவாழைக் குடிலில் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் திருவிழா நடைபெறும்.அன்னதானம் செய்து வழிபட்டனர். விழா துவங்கியதிலிருந்து பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து பச்சவாழை பரப்பியும், கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக் கடன் நிறைவேற்றி வருகின்றனர். நாளை மஞ்சள் நீராடுதல் நடைபெறும்.