பதிவு செய்த நாள்
20
மார்
2021
06:03
பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு பூர்வாங்கம் நடந்து, 9:00 மணிக்கு ரிஷப வாகனக்கொடி ஏற்றப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா, மலர் பல்லக்கு நடந்தது. இன்று இரவு, 8:00 மணிக்கு, சூர்யப்ரபை சந்திரப்ரபையில் திருவீதியுலா நடக்கிறது.அடுத்து வரும் நாட்களில், சிம்மவாகன திருவீதியுலா, பஞ்சமூர்த்திகள் ரிஷப காட்சி, அறுபத்து மூவர் அருட்காட்சி, திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருத்தேர் வடம் பிடித்தல், வரும், 25ம் தேதி, மாலை, 4:01 மணிக்கு நடக்க உள்ளது.