ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 14.83 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மாதந்தோறும், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. இந்நிலையில், எட்டு தட்டுக்காணிக்கை உண்டியல்கள் மட்டும் திறக்கப்பட்டு நேற்று எண்ணப்பட்டன.கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி, கோவை உதவி ஆணையாளர் விஜயலட்சுமி தலைமையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதில், பக்தர்கள் செலுத்தி, 14 லட்சத்து, 83 ஆயிரத்து, 308 ரூபாய் காணிக்கை இருந்தது.