குன்றக்குடி: சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி திருவிழாவின் மூன்றாம் நாள் விழாவான இன்று நகரத்தார்கள் பால்குடம், காவடி எடுத்துச் சென்றனர்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர விழா கடந்த மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நகரத்தார்கள் சார்பில் பால்குடம், பால்காவடி, பன்னீர் காவடி, விபூதி காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அதன் அடிப்படையில் நேமத்தான்பட்டி நகரத்தார்கள் கடந்த 62 ஆண்டுகளாக பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். மூன்றாம் நாள் விழாவான இன்று நேமத்தான்பட்டி நகரத்தார்கள், நேமத்தான் பட்டியில் இருந்து குன்றக்குடிக்கு பால்குடம், காவடிகள் எடுத்துச் சென்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழக்கத்தை விட குறைவான மக்களே பால்குடம், காவடி எடுத்துச் சென்றனர். வருகின்ற மார்ச் 27 முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.