பெரியகுளம் : பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிவனுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மக்கள் சகல ஐஸ்வர்யத்துடனும், நோயின்றி வாழவும் சிவருத்ர ேஹாமம் பூஜை நடந்தது. ஏராளாமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சிவன், ஞானாம்பிகை அம்மனுடன் காட்சியளித்தார். நந்திக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கணேசன், ஸ்ரீராம் செய்திருந்தனர்.