செங்கல்பட்டு: அஞ்சூர், ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் கோவில், மகா கும்பாபிஷேக விழா, நாளை நடைபெறுகிறது. செங்கல்பட்டு அடுத்த அஞ்சூரில் சுவர்ணாம்பிகை சமேத சோமநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று காலை 9 மணிக்கு கலச பிரதிஷ்டை, யாக பூஜை, இரவு 11 மணிக்கு சோமநாத ஈஸ்வரர் லிங்க பிரதிஷ்டை நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு, மகா கும்பாபிஷேக விழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.