காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2012 02:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நாளை காலை கொடியேற்றத்துடன் 31ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நாளை 8ம் தேதி காலை 4.30 மணிக்கு, ஆள்மேல் பல்லக்கு, காலை 10 மணிக்கு தீர்த்தவாரி, இரவு புண்ணியகோடி விமானம், 9ம் தேதி காலை த்வாதசாராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம், த்வஜ அவரோஹணம் நடைபெறும். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.