அவிநாசி : அவிநாசி கங்கவர் வீதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, சக்தி அழைத்தல், படைக்கலம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம், 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மதியம்,1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு ஆற்றில் கும்பம் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.