தேவிபட்டினம் நவபாஷனத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2021 12:03
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும் திருமணத்தடை, ஏவல் உள்ளிட்ட தோஷ நிவர்த்தி வேண்டியும் பரிகார பூஜைகள் செய்வதற்காக இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்திற்கு கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் வெயில் தாக்கத்தால், பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் வருகை இன்றி நவபாஷாணம் வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது நிலவும் கடும் வெயில் தாக்கத்தால் இந்த நேரங்களில் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.