பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பங்குனி பால்குட விழாவையொட்டி அம்மன் பூப்பல்லக்கில் சயன கோலத்தில் வீதி வலம் வந்தார். இக்கோயிலில் பத்து நாட்கள் நடந்த பங்குனி விழாவினை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அபிஷேகத்திற்கு பின்னர், இரவு அம்மன் பாம்பணையில் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்தார். இரவு 10:00 மணிக்கு மேல் பூ பல்லக்கில் சிறப்பு மேளதாளங்கள் முழங்க வீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று தேவஸ்தானத்தின் சார்பில் உத்ஸவ சாற்றுமுறையுடன் விழா நிறைவடைந்தது.