காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி விநாயகர், சுப்ரமணியர், கைலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் வீதியுலா நடந்தது. விழாவில் இன்று தெப்போற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.