பதிவு செய்த நாள்
01
ஏப்
2021
11:04
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, காரைக்கால் அம்மையார் குருபூஜை விழா, விமரிசையாக நடந்தது.
காரைக்காலில் பிறப்பு ,இறப்பு இல்லாத இறைவன், நம்மை பேணும் அம்மை காண் என, இறைவனால் அம்மையார் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார், 63 நாயன்மார்களில், ஒருவர். திருக்கயிலாயத்துக்கு முதன்முதலில் சென்றவர், இவர்; இவரது பாடல்கள், 11வது திருமுறையில் அமைந்துள்ளன.திருப்பூர் அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டத்தினர் சார்பில், காரைக்கால் அம்மையார் குருபூஜை விழா நேற்று நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நாயன்மார் மண்டபத்தில் உள்ள, காரைக்கால் அம்மையாரின் மூலவர் சிலைக்கும்; உற்சவர் சிலைக்கும், சிவாச்சார்யர்கள் மகா அபிேஷகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து, மாங்கனியை படைத்து, சிவாகம முறைப்படி பூஜைகள் செய்தனர்.சிவனடியார் திருக்கூட்டத்தினர், தேவாரம், திருவாசகம் உட்பட திருமுறை பாடல்களை பாராயணம் செய்து, திருத்தொண்டர் புராணம் பாடியும் வழிபட்டனர்.