பதிவு செய்த நாள்
01
ஏப்
2021
06:04
விழுப்புரம்: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.
விழுப்புரம் மாவட்ட அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பில், கொரோனா நோய் தொற்று பரவாமல் உலக நன்மை பெற வேண்டியும், த மிழகத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய நல்லாட்சி மலர வேண்டியும்,சங்கடஹர சதுர்த்தியையொட்டியும், விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, விழுப்புரம், பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு, நேற்று காலை 8.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந் து சக்தி விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை, அந்தணர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் செயலாளர் ரமேஷ், மகளிரணி செயலாளர் சுபஸ்ரீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.