எக்கலா தேவி கோயிலில் பக்தி பரவசத்துடன் தீ மிதித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2021 06:04
சேத்தூர்: சேத்தூர் எக்கலா தேவி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த மார்ச் 23 பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவினை முன்னிட்டு, தினமும் அம்மன் சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நேற்று மாலை 6:30 மணிக்கு மேல் தொடங்கியது. முதலில் அம்மன் பூக் குண்டத்தை சுற்றி வந்தவுடன், காத்திருந்த ஆண், பெண் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.