ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தர்மமூனீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஏவுபத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை நவகிரஹ பூஜை, பூர்வாங்க பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதி நடந்தது. காலை 10 மணிக்கு கோயில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அங்காளபரமேஸ்வரி, தர்மமூனீஸ்வரர், ஏவுபத்ரகாளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா கமிட்டி தலைவர் நாகலிங்கம், சந்தானம், முத்துமுனியாண்டி, ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.