நாமக்கல்: வர்த்தக நிறுவனங்கள் நடப்பாண்டு வர்த்தகத்தை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து துவக்கினர். நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்நேயர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள், லாரி தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் ஏப்., முதல் நாளான நேற்று புதுக்கணக்கு துவங்கினர். அவ்வாறு கணக்கு துவங்கும் பல்வேறு நிறுவனங்கள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சுவாமி பாதத்தில் தங்கள் கணக்கு நோட்டை வைத்து சிறப்பு வழிபாடு செய்து, நடப்பாண்டின் புதுக்கணக்கை துவங்கினர்.