பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி திருக்கல்யாண விழாவையொட்டி பெருமாள் பூப்பல்லக்கில் வீதிவலம் வந்தார். இக்கோயில் பங்குனி திருக்கல்யாண விழா, மார்ச் 27 இரவு 8:00 மணிக்கு அனுக்கையுடன் துவங்கியது. மார்ச் 28 காலை 9:00 மணிக்கு கோயில் பிரகாரத்தில் பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. 9:55 மணிக்கு ஊஞ்சல் சேவையில் சவுந்தரவல்லித்தாயாருடன், பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மார்ச் 29 முதல் ஊஞ்சல் சேவையும், மார்ச் 31ல் மாற்றுத்திருக்கோலத்தில் தாயார், பெருமாள் அருள்பாலித்தனர்.நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 8:00 மணிக்குஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், அமர்ந்த கோலத்தில் பூப்பல்லக்கில் பெருமாள் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.