பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
12:04
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களை அலங்கரித்து வந்த, பல வண்ணங்கள் கொண்ட மின் விளக்குகள், தேர்தலையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், குமரகோட்டம், உலகளந்த பெருமாள், வைகுண்ட பெருமாள், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில், இரு ஆண்டுகளுக்கு முன், பல வண்ணங்கள் கொண்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.இரவு நேரங்களில், இந்த கோவில் கோபுரம் மற்றும் மூலவர் விமானங்கள் போன்ற பகுதிகள், வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. இவை, இரவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்பட்டன.இந்நிலையில், ஒரு மாதமாக, அந்த மின் விளக்குகள் எரிவதில்லை. தேர்தலை முன்னிட்டு, பல வண்ண மின் விளக்குகள் எரிவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின், மீண்டும் வழக்கம் போல், பல வண்ண மின் விளக்குகள் எரியும் என, அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.