பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
01:04
திருப்பதி:தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மத மாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களிடையே ஹிந்து தர்மம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விசாகா ஸ்ரீ சாரதா உத்தர பீடாதிபதி ஸ்ரீ ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள், 33 ஆயிரம் கி.மீ., தர்ம பிரசார யாத்திரை மேற்கொண்டார்.
விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி, ஸ்ரீ ஸ்வரூபானானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழி காட்டுதல்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 2019ல் இந்த யாத்திரையை துவங்கிய ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கிராமம் கிராமமாக நடந்தே சென்று, பட்டியலின, பழங்குடியின மக்களிடையே ஹிந்து தர்மம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அங்குள்ள புராதன, பிரபல கோவில்களுக்கு பட்டியலின, பழங்குடியின மக்களை உடன் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தார்.33 ஆயிரம் கி.மீ.,இப்படி, 33 ஆயிரம் கி.மீ., துாரம் நடந்தே யாத்திரை மேற்கொண்ட அவர், யாத்திரையின் நிறைவாக திருமலை திருப்பதிக்கு நேற்று முன்தினம் வந்தார்.அவருடன் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் குக்கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக நடந்து வந்த 1,200 பழங்குடியின, பட்டியலின மக்களும், திருமலை வந்தனர்.
பாதயாத்திரை வந்தவர்களை திருமலை தேவஸ்தான அதிகாரிகளும், வேதவிற்பன்னர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர்கள், தனி வரிசையில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.அதன்பின், திருமலையில் உள்ள நட நிரஞ்சனம் அரங்கில், பக்தர்களோடு சேர்ந்து பஜன் மற்றும் நாம சங்கீர்த்தனம் செய்த சுவாமிகள், திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு செய்து கொடுத்த, பகவத் கீதை புத்தகத்தை, யாத்திரையில் உடன் வந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கினார்.
ஆனந்த கண்ணீர்: புனித யாத்திரை குறித்து ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:என்னுடன் பல மாதங்கள் நடைபயணமாக யாத்திரையாக வந்த பட்டியலின, பழங்குடியின மக்கள், ஏழுமலையானை தரிசித்தபோது, அவர்கள் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்ததை பார்த்தபோது மெய்சிலிர்த்து போனேன். இவர்கள் ஹிந்து தர்மத்தை கைவிடாமல் கடைப்பிடிப்பதோடு, இரண்டு மடங்கு உற்சாகத்துடன் ஹிந்து தர்மத்தை பரப்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.பாஸ் இன்ட்ரஸ்ட் / பட்டியலின, பழங்குடி மக்கள்நடைபயணமாக யாத்திரையில் உடன் வந்த பட்டியலின, பழங்குடியின மக்களுடன், திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், செய்தியாளர்களிடம் பேசுகிறார், விசாகா ஸ்ரீ சாரதா உத்தர பீடாதிபதி ஸ்ரீ ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள்.ஆந்திரா, தெலுங்கானாவில் மத மாற்றம் தடுக்க33 ஆயிரம் கி.மீ., யாத்திரை சென்ற சங்கராச்சாரியார்.