Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் முத்து மாரியம்மனுக்கு ... 250 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
10:04

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரத்திற்கு, வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமம் எல்லிங்க நாயக்கன்பட்டி. இங்குள்ள முருகன் கோயிலில் பழைய கல்வெட்டுகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் அருப்புக்கோட்டை ஸ்ரீதர், மதுரை அருண், அழகப்பா பல்கலைக்கழக கல்வெட்டு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் கள ஆய்வு செய்தனர். அதில் கோவிலின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த 15 துண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர் ஸ்ரீதர், "இந்த கோவில் பிற்கால பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்டது. முருகன் கோவில் அமைக்கும் வழக்கம் 700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இந்த கோயிலில் 15 கல்வெட்டுகள் காணப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே கல்வெட்டாக இருந்திருக்கவேண்டும். பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. கோவிலை சீரமைக்கும் போது கல்வெட்டுகள் இடம் மாறி போயிருக்கும். இந்த கல்வெட்டுகளில் அரசரின் பெயர் இல்லை. ஒரு கல்வெட்டில் மட்டும் திரிபுவன சக்கரவர்த்திகள் என்று உள்ளது. அடுத்தடுத்த எழுத்துக்கள் சிதைந்து உள்ளதால் எந்த அரசர் என்று அறிய முடியவில்லை. இந்த கோயிலுக்கு நிலதானம் கொடுத்ததையும் கோயிலுக்கு கோயில் நிலங்கள் இறையிலியாக மாற்றப்பட்டதும் சொல்லுகிறது. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் அமைப்பை பார்க்கும் போது பிற்கால பாண்டியர் கல்வெட்டு என்று உறுதியாக கூறமுடியும். கோவில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது போன்ற பல கோயில்கள் பல கிராமங்களில் உள்ளன. இவற்றை ஆய்வு செய்தால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும்." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar