ஆஞ்சநேயர் கோவில் குளம் தெப்பலுக்கு தண்ணீர் நிரப்பல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2021 04:04
விழுப்புரம் : லட்ச தீப திருவிழாவையொட்டி விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம் சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரம் திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் லட்ச தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா சித்திரை 1ம் தேதி (ஏப்., 14ம் தேதி) துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படும். இதை யொட்டி கோவில் குளத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது. இதையடுத்து, தெப்பல் விடுவதற்காக வறண்டு கிடக்கும் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றது.