விருதுநகர் மாரியம்மன் கோயிலில் அக்கினி சட்டி: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2021 12:04
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏரளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஹிந்து நாடார் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28 ல் கொடியேற்றுடன் துவங்கியது. தினமும் அம்மன் ,வெயிலுகந்தம்மனுடன் பல்வேறு மண்டகபடியில் எழுந்தருளினார்.பெண் பக்தர்கள் விழா துவங்கிய நாள் முதல் இரவு முழுவதும் குடங்களில் தண்ணீர் சேகரித்து கொடி மரத்திற்கு ஊற்றி வழிபட்டனர். விருதுநகர் மட்டுமன்றி சுற்று கிராமத்தினர், வெளி மாவட்ட பக்தர்களும் அதிகளவில் பங்கேற்றனர்.
மார்ச் 4ல் கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிப்பட்டனர். நேற்று நடந்த அக்னிசட்டியை தொடர்ந்து, விரதமிருந்து பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் அக்னிட்டி எந்தி வந்தனர். நேற்று இரவு வரை இது தொடர்ந்தது. 11,21 என தீ சட்டிகளை பக்தி பரவசத்துடன் ஏந்தி வந்தனர். இதோடு கரும்பு தொட்டில் குழந்தை, காவடி, கயிறுகுத்து, கரும்புள்ளி செம்புள்ளி, காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். விழாவையொட்டி விருதுநகரில் எங்கும் பக்தர்களின் ஆஹோ...அய்யாேஹா பக்தி கோஷம் எதிரொலித்தது.கோயிலிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். இதையொட்டி விருதுநகர் விழாக்கோலம் பூண்டிருந்தது.