* நெஞ்சே! நம்பிக்கை இழக்காதே! கலக்கம் அடையாதே! * தீய எண்ணம் வராதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். * உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டவராக இருங்கள். * நாளைய வாழ்வு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. * கோணல் புத்தி கொண்டவர்களுக்கு நன்மை உண்டாகாது. * வஞ்சக மனம் கொண்டவர்கள் தீமையில் சிக்கிக் கொள்வர். * தீங்கு விளைவிக்கும் பேச்சை தீயவனே விருப்பமுடன் கேட்பான். * உடன்பிறந்தவர் போல ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். * துணிச்சலை ஒருபோதும் கைவிடாதீர்கள். * இரண்டு எஜமானருக்கு யாரும் பணிவிடை செய்ய முடியாது. பைபிள்