திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கொரோனா கட்டுப்பாடுகளால், பிரதோஷ பூஜைகள் திருவீதியுலா இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி மற்றும் அதிகார நந்திக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை மட்டும் நடக்கிறது.திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மாலை, பிரதோஷ பூஜைகள் நடந்தது. மூலவர் மற்றும் உமாமகேஸ்வரருக்கும், நந்தியம்பெருமானுக்கும் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.அதற்கு பிறகு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள், நந்தியம்பெருமானுக்கு, வில்வ இலைகளை சமர்ப்பித்து வழிபட்டனர்.