வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகா குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி ஏப். 11 காலை விக்னேஷ் பட்டர் தலைமையில் அனுக்ஜை, விக்னேஸ்வரர் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. கோயில் பிரகாரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடியேற்றினர். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டன. விழா நாட்களில் அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக ஏப். 23 திக்விஜயம், ஏப். 24, காலை 10:30 மணி முதல் 11.00 மணிக்குள் திருக்கல்யாணம், ஏப். 25 மாலை தேரோட்டம் நடக்கிறது.