தெலுங்கு வருட பிறப்பு: மலர்களால் ஜொலித்த திருமலை திருப்பதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2021 06:04
திருப்பதி : தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி திருமலை பெருமாள் கோவில் வளாகம் மலர்களாலும், பூக்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கோவிலின் வாசலில் துவங்கி மூலவர் குடிகொண்டு இருக்கும் தங்க கருவறை வரை பலவண்ண பூக்களின் அலங்காரம் காணப்பட்டது.
இதற்காக எட்டு டன் பூக்கள் பயன்பட்டுள்ளது. பெருமாளை தரிசிக்க போகும் போது இதைக்கண்ட பக்தர்கள் சந்தோஷப்பட்டனர். வழக்கமாக செய்யப்படும் அலங்காரத்துடன் இந்த வருடம் ‛ஜனுார் எனப்படும் தென்னை ஒலை கொண்டு செய்யப்பட்ட புதுமையான அலங்காரங்களும் பக்தர்கள் மனதை கவர்ந்தது. கொடி மரத்தின் கீழ் ஒலையால் வேயப்பட்டிருந்த நரசிம்மரும் அவரைச் சுற்றி தர்ப்பூசணியால் உருவாக்கப்பட்டிருந்த தசாவதார காட்சிகளும் மற்றொரு சிறப்பாகும். சேலத்தில் உள்ள நன்கொடையாளர்கள் பெரும்பாலான பூக்களை வழங்கியிருந்தனர். இதனை பெங்களூரு,விஜயவாடாவைச் சார்ந்த கலைஞர்கள் பல்வேறு விதங்களில் காட்சிப்படுத்தியிருந்தனர்.கோயில் வளாகத்தில் மட்டுமின்றி கோயிலுக்கு சொந்தமான தோட்டத்திலும் யானை போன்றவை செடிகளால் உருவாக்கப்பட்டு இருந்தது. -எல்.முருகராஜ்