பதிவு செய்த நாள்
14
ஏப்
2021
02:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை(ஏப்.,15) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்., 26 வரை நடக்கும் இத்திருவிழா கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடத்தப்படுகிறது.
அதேசமயம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுவாமி புறப்பாடு காலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்.,15 கொடியேற்றம் நாளன்று பக்தர்கள் காலை 6:00 - 9:00 மணி வரை, காலை 11:30 - மதியம் 12:30 மணி வரை, மாலையில் 4:00 மணி - 5:30, இரவு 7:30 - 9:00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அன்று காலை 9:00 - 11:30 மணி வரை சுவாமி புறப்பாடு என்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஏப்., 16 முதல் 23 வரை தினமும் காலை 6:00 - 8:00 மணி வரை, 9:00 -மதியம் 12:30 மணி வரை, மாலையில் 4:00 மணி - 5:30 மணி வரை, இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்நாட்களில் சுவாமி புறப்பாடு நேரமான காலை 8:00 - 9:00 மணி, மாலை 5:30 - இரவு 7:30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதியில்லை.ஏப்.,24 திருக் கல்யாணத்தன்று காலை 9:30 - மதியம் 2:30 மணி வரை, மதியம் 3:30 - மாலை 5:30 மணி, இரவு 7:30 - 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஏப்.,25 சட்டத்தேரன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 - 5:30 மணி, இரவு 7:30 - 9:00 மணி வரையும், ஏப்., 26 காலை 7:00 - 10:30 மணி, மாலை 4:00 - 5:30 மணி, இரவு 7:30 மணி - 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.