Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை மாகாளியம்மன் கோவிலில் 101வது ... பொங்கல் பூஜை செய்வது எப்படி? பொங்கல் வைக்க நல்ல நேரம்..! பொங்கல் பூஜை செய்வது எப்படி? பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கும் திருப்பதி தேவஸ்தானம்
எழுத்தின் அளவு:
தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கும் திருப்பதி தேவஸ்தானம்

பதிவு செய்த நாள்

14 ஜன
2026
01:01

திருப்பதி; உலகப்புகழ் பெற்ற திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம், கோடிக்கணக்கான பக்தர்களின் வருகைக்கு மட்டுமல்லாமல், "பசி என்ற சொல்லுக்கே இடமில்லாத புனிதத் தலம்" என்ற பெருமைக்கும் பெயர் பெற்றது. திருமலைக்கு வரும் எந்தவொரு பக்தரும் பசியோடு திரும்புவதில்லை; ஒவ்வொருவரும் நிறைந்த வயிற்றுடனும், திருப்தியான மனதுடனும் வீடு திரும்புகின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசியுடனும், தேவஸ்தான அன்னப்பிரசாதத் துறையின் அர்ப்பணிப்புடனும், தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்களுக்கு மிக நேர்த்தியாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.


திருமலையில் இதற்காக மூன்று பிரம்மாண்ட சமையல் கூடங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன:மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், ஸ்ரீ அக்ஷயா சமையல் கூடம், வகுளமாதா சமையல் கூடம் வைகுண்டம் வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்கள் முதல், தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் உணவு சென்றடைவதை தேவஸ்தானம் உறுதி செய்கிறது. தினமும் வெங்கமாம்பா வளாகம் 74,000 பேர்,ஸ்ரீ அக்ஷயா சமையல் கூடம்1,48,000 பேர், வகுளமாதா சமையல் கூடம்77,000 பேர் உணவு சாப்பிடுகின்றனர். காலை: கோதுமை ரவை உப்புமா / சூஜி ரவை உப்புமா / சேமியா உப்புமா / பொங்கல், சட்னி மற்றும் சாம்பார். மதியம் மற்றும் இரவு (8 வகை உணவுகள்): சர்க்கரை பொங்கல், சாதம், கூட்டு, சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர். இதர உணவுகள்: சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், சுண்டல், பால், டீ மற்றும் காபி. விசேஷ நாட்கள்: பாதாம் பால், பிஸ்கட் மற்றும் ஜூஸ் பாக்கெட்டுகள் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. மறைந்த ஆந்திர முதல்வர்  ராமராவின் கனவுத் திட்டமாக ஏப்ரல் 6, 1985- ல் இந்த அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. 1994-இல் இது ஒரு அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. தற்போது ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு வழிகாட்டுதலின்படி, இந்தத் திட்டம் திருமலை மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள தேவஸ்தானக் கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.சுமார் 1,000 பணியாளர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகர்களின் தன்னலமற்ற உழைப்பால், திருமலை இன்று ஒரு தெய்வீக உணவுக்கூடமாகத் திகழ்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar