பதிவு செய்த நாள்
14
ஏப்
2021
03:04
தஞ்சாவூர், திருவையாறில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான, அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில், 31 லட்சம் ரூபாய் மதிப்பில், புதியதாக உருவாக்கப்பட்ட சுப்பிரமணியர் திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான, அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் தேர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, பழுதடைந்ததால், திருத்தேர் வீதிஉலா காட்சி நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவில் நிர்வாகம் புதிய தேர் செய்ய திட்டமிடப்பட்டு, சுமார் 11 அரை அடி உயரமும், 8-9 அகலத்திலும் பழமை மாறாமல் தேவஸ்தான நிதியில் இருந்தும் பக்தர்களின் நன்கொடையை கொண்டு சுமார் 31 லட்சம் மதிப்பீட்டில், புதிய திருத்தேர் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று(14ம் தேதி), புதிய திருத்தேருக்கு பூர்ணாஹூதி பூஜை செய்யப்பட்டு, பின்பு கடம் புறப்பாடு செய்து சன்னதியிலிருந்து புதிய தேர் வரை ஊர்வலமாக சென்று புனிதநீரால் தேரை அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டன.
பின்னர், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக, தேர் வெள்ளோட்டத்திற்கு, நான்கு வீதிகளில் செல்ல அனுமதி அளிக்காத நிலையில், கோபுரத்தின் முகப்பில் இருந்து பழயை தேர் நின்ற இடத்தின் வரை, சுமார் 100 மீட்டர் துாரத்திற்கு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நிறுத்தினார்கள். தருமபுர ஆதீன 27வது குருமகா சன்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துக்கொண்டு திருதேர் வெள்ளோட்டத்தை நடத்தினர்.
ரிஷ்ப வாகனம்: தமிழ்புத்தாண்டை முன்னிட்டு, ஐயாறப்பர் ரிஷ்ப வாகனத்தில், வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.