நரசிம்மர் கோவில் பிரமோற்சவ விழா 13ம் தேதி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2012 10:06
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா நாளை மறுதினம், 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி நாளை இரவு உற்சவர் சேனை முதன்மையார் திருவீதியுலா நடைபெறும். நாளை மறுதினம் காலை 7.30 மணிக்கு கொடியேற்றமும், 9 மணிக்கு உற்சவர் பெருமாள் சப்பரத்திலும், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்றாம் நாளான, 15ம் தேதி காலை 6 மணிக்கு கருட சேவையும், ஏழாம் நாளான, 19ம் தேதி தேர்த் திருவிழாவும் நடைபெறும். தினமும் உற்சவர் காலை, மாலை என பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.