பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
06:04
உடுமலை:யுகாதி பண்டிகையையொட்டி, உடுமலை திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவில் வளாகத்தில், ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதியில், யுகாதி பண்டிகையையொட்டி, கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள், கோவில் அருகிலுள்ள புற்றுக்கோவிலில், ஒரு வாரமாக சிறப்பு வழிபாடுகள், நடந்தது. நேற்று கோவில் வளாகத்தில், ரேணுகாதேவி திருக்கல்யாணம் நடந்தது.பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, ஜமதக்னி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து, கண்ணாடி தரிசனம், ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டது. மேலும், யுகாதி பண்டிகையொட்டி, வேங்கடேச பெருமாள், தங்கக்கவசம் சார்த்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.