பிறந்தது தமிழ் புத்தாண்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 06:04
சூலூர்: தமிழ் புத்தாண்டு பிறப்பை ஒட்டி கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழ் புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்து, மா, பலா, கொய்யா உள்ளிட்ட முக்கனிகள் படைக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு, புத்தாண்டின் பலன்கள் கூறப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் சிவன் மற்றும் பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் மற்றும் செஞ்சேரிமலை வேலாயுதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.