சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயிலில் தீர்த்தவாரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2012 10:06
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயிலில் வைகாசி தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இங்கு 17 நாட்கள் நடந்த திருவிழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம், அம்மன் சர்வ அலங்காரத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். பூசாரி கணேசன், அம்மனுக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகள் செய்தார். பின்னர் ஆற்றில் மின்விளக்கு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னூஞ்சலில் அம்மன் ஆடி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல மாவட்ட பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நிர்வாக அதிகாரி பூமிநாதன், ஊழியர்கள் சவுந்திரராஜன், சுந்தர் தர்மராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.