திருப்போரூர்: பஞ்சம்திருத்தி வையகத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. திருப்போரூர் அடுத்த, புண்ணப்பட்டு ஊராட்சியில் உள்ள பஞ்சம்திருத்தி கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமையான வையகத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்தது.இதையடுத்து கிராம மக்கள் கோவிலில் திருப்பணிகள் செய்யத் திட்டமிட்டனர். அதன்படி ரூ.15 லட்சம் செலவில் வையகத்தம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதிகள் நூதனமாக அமைக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து, கடந்த 8ம் தேதி யாகŒõலை துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்தின்மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. பின் மகா அபிஷேகமும் நடந்தது.