புதுடில்லி : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தாஜ்மஹால் உள்ளிட்ட புராதான நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், மே, 15ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தாஜ்மஹால் உள்ளிட்ட புராதான நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து, மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல், டுவிட்டர் வாயிலாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நாட்டில், தற்போது கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் வைத்து, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் அனைத்து புராதான சின்னங்கள், இடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களும், வரும் மே, 15ம் தேதி வரை மூடப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.