மதுரை : திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா, காரைக்கால் அம்மையார் விருது பெற்ற பேராசிரியை ஞானப்பூங்கோதைக்கு பாராட்டு விழா, திருவிளையாடல் புராணம் வினா விடை வடிவில் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தருமை ஆதீன சொக்கநாதர் மண்டபத்தில் நடந்த விழாவில் மைய நிர்வாகி தமிழ்மணி வரவேற்றார். லயன்ஸ் கவர்னர் ஆடிட்டர் மணிகண்டன் தலைமை வகித்தார். திருவிளையாடல் புராணம் நுாலை பேராசிரியர் அருணகிரி வெளியிட டாக்டர் சேகர் பெற்றுக் கொண்டார்.எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி உலகாளும்மீனாட்சி என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், அன்னை மீனாட்சி என்ன கொடுப்பாள் என்று நினைக்கக் கூடாது.தாயைத் தேடும் குழந்தையாக அவள் முன் நிற்க வேண்டும். ஒருநாளில் நடக்கும் துன்பத்தை கண்டு முடிவுக்கு வரக்கூடாது. ஓராண்டின் இன்ப, துன்ப கணக்குகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார். சைவ சித்தாந்த ஆசிரியை ஞானாபிேஷகம் நன்றி கூறினார்.மையத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் டாக்டர் கண்ணன், மாவட்ட தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர். நன்னெறி பாடம் நடத்திய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மைய அமைப்பாளர் சங்கரநாராயணன் தொகுத்து வழங்கினார்.