பதிவு செய்த நாள்
17
ஏப்
2021
10:04
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் கோவில், அரங்கநாதர் கோவில் மற்றும் மலைக்கோட்டை சாலை ஆகியவை, மே, 15 வரை மூடப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களுக்கு, ‘சீல்’ வைக்கும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல்லில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், கோட்டை சாலையில் உள்ள நரசிம்மர் கோவில், பிரதான சாலையில் உள்ள அரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை ஆகியவை கொரோனா நோய் தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் பூட்டப்பட்டது. அந்த இடங்களில், ‘பாதுக்கக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை மே, 15 வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மூடப்படுகிறது’ என தொல்லியல் துறை அதிகாரிகளால் பொது அறிவிப்பு வைக்கப்பட்டது.