சித்திரை விழாவை உள்ளே கொண்டாட முடிவு: பக்தர்கள் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கீடு3
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2021 03:04
மானாமதுரை: -சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி -சோமநாதர் கோயில் சித்திரை விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவை உள் விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சித்திரைத் விழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மானாமதுரையில் சித்திரை விழாவை உள் விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று காலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது தினந்தோறும் சுவாமிகளுக்கு மாலை 5:30 மணிக்கு தீபாராதனை நடத்திய பின்னர் 7:00 மணிக்குள் கோயிலுக்குள்ளேயே சுவாமி வீதி உலா நடைபெறும், அதற்குப் பிறகு 7:00 மணியிலிருந்து 8 : 00 மணிக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.அதேபோன்று வருகிற 24ம் தேதி காலை10:35 மணியிலிருந்து 11:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.மறுநாள் நடைபெறும் தேரோட்டம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.