மேட்டுப்பாளையம்: மருதூர் அனுமந்தராய சுவாமிக்கு, சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழாவில், காய்கறிகள் அலங்காரம் செய்யப்பட்டது.
காரமடை அருகே மருதூரில், அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை அன்று, சிறப்பு பூஜையும், அலங்கார, அபிஷேகமும் நடைபெறும். மூலவர் சுவாமி ராமர் பக்தராக, கருவறையில் கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சியளித்து வருகிறார். இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, நினைத்த காரியம் ஜெயம் ஆவதால், ஜெயமங்கள ஆஞ்சநேயர் என பக்தர்களால் போற்றப்படுகிறார். ஒவ்வொரு தமிழ் மாதமும், தனித்தனி அலங்காரத்தில், ஆஞ்சநேயர்ர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழாவில், ஏராளமான பழங்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.