பதிவு செய்த நாள்
19
ஏப்
2021
12:04
நாமக்கல்: சித்திரை மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தெலுங்கு வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்படும்.அந்த வகையில் நேற்று சித்திரை, முதல் ஞாயிறை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வழக்கமாக காலை, 10:00 மணிக்கு நடைபெறும் அபிஷேகங்கள், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், முன்னதாக காலை, 5:00 மணிக்கே துவக்கப்பட்டது.அதில், நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. 7:00 மணிக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.