ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை முன்னிட்டு 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சந்தனகாப்பு சாற்றபட்டு மலர் சட்டை மற்றும் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் பட்டர்கள் செய்திருந்தனர்.