பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
09:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி, அம்மன் உலா வந்து அருள்பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்தாண்டு போல் இந்தாண்டும், சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள், பக்தர்களின்றி நடத்தப்பட உள்ளன. திருவிழாவின் 5ம் நாளான நேற்று தங்க குதிரை வாகனத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தனர். ஆடி வீதியில் சுவாமி புறப்பாடு சமயத்தில், பக்தர்களுக்கு அனுமதியில்லை. முக்கிய நிகழ்ச்சியாக, ஏப்., 22ல் மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப்., 23ல் திக் விஜயம் நடக்கிறது. திருக்கல்யாணம் ஏப்., 24 காலை, 8:45 முதல், 8:50 மணிக்குள் நடக்கிறது. இதை கோவில் இணையதளம் www.madurai meenakshi.org மூலம் பக்தர்கள் காணலாம்.