பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
09:04
கடலுார்; கொரோனா பரவல் எதிரொலியால், தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவில் சித்திரை திருவிழா எளிமையாக நடந்தது.
கடலுார் அடுத்த தென்னாம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற அழகுமுத்து அய்யனார் கோவிலில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் திங்களன்று சித்திரை திருவிழா, பூரணி பொற்கலை மற்றும் அழகுமுத்து அய்யனார் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று 19ம் தேதி நடந்தது.கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை செய்யப்பட்டு, எளிமையாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது.கோவிலில் அனைத்து வழிகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து, பக்தர்கள் செல்ல தடை செய்திருந்தனர். ஆனாலும், சுற்றுபுற பகுதிகளைச் சேர்ந்த குறைவான மக்கள் கோவிலுக்கு வந்தனர். இருப்பினும், சித்தர் ஜலசமாதி கூடம், கோவிலில் அமைந்துள்ள சன்னதிகள் அனைத்து அடைக்கப்பட்டதால் வெளியில் இருந்தபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர். அமைச்சர் சம்பத், நேற்று அதிகாலையிலேயே குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார்.