க.பரமத்தி: தென்னிலை தெற்கு பஞ்சாயத்து கொக்குமடை பாளையம் விநாயகர், மதுரைவீரன், கருப்பண்ண ஸ்வாமி ஆகிய கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கிடாவெட்டி நேர்த்தி கடன் செலுத்தி ஸ்வாமி வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற கோவில்களில் கடந்த 8ம் தேதி பூச்சாட்டுதல், 9ம் தேதி காவடிகள் புறப்படுதல், மாலை ஸ்ரீ கன்னிமார் ஸ்வாமிக்கு பொங்கல் வைத்து படைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் கோவிலில் கிடாவெட்டி பொங்கல் படைக்கப்பட்டது. நேற்று 11ம் தேதி மறு அபிஷேக பூஜையுடன் விழா முடிந்தது. விழாவில் கோவில் தலைவர் ஓய்வு டி.எஸ்.பி., அரசு, பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, கவுன்சிலர் சுப்பிரமணியம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா திவேல் மற்றும் குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர்.