திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள தெர்ப்பசயன ராமர் சன்னதியில் ராமநவமி உற்ஸவ விழா நடந்தது. சித்திரை மாத நவமியில் ராம நவமி கொண்டாடப்படும். ராமபிரான், சீதா பிராட்டியார், லட்சுமணர் ஆஞ்சநேயர் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. கோயில் பட்டாச்சாரியார்களால் ராமாயண துதி பாடல்கள், ராம நாம சங்கீர்த்தனம் அர்ச்சனைகள் பாடப்பட்டது. முகக் கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.