சோழவந்தான்: சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் ஸ்ரீ சந்தான கோபால சுவாமி கோயிலில் ஸ்ரீ ராமஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி ராமர் படத்திற்கு முன் அகண்டநாம பஜனை பாடப்பட்டது.ஏற்பாடுகளை ராமபக்த சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.