பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
04:04
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் வெயில் மழையில், பாதிக்காத வகையில், நடைபாதை நிழல் கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் பவானி ஆற்றின் அருகே அமைந்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்து கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அதனாலும், வேண்டுதல் நிறைவடைந்ததை அடுத்து, கிடா விருந்து வெட்டும் நிகழ்ச்சிகள், இங்கு அதிகளவில் நடைபெறுவதால், இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
தற்போது வெயில் அதிகளவில் அடித்து வருவதால், கோவில் வளாகத்தில் உள்ள பஸ்ஸ்டாண்டிலிருந்து கோவிலுக்கு, பக்தர்கள் வெறும் காலில் நடந்து வரும் போது, சூடு தாங்க முடியாமல், மிகவும் சிரமப்பட்டனர் பட்டு வந்தனர். இதை அடுத்து கோவில் நிர்வாகம் நன்கொடையாளர் உதவியுடன், கோவில் வளாகத்தில் பஸ்ஸ்டாண்டிலிருந்து, ராஜகோபுரம் வரை பக்தர்கள் நடந்து வருவதற்கு, நடைபாதை பேவர் பிளாக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் நடந்து வரும் பக்தர்கள், மழையில் நனையாமல் இருக்கவும், வெயில் சூடு இல்லாமல் இருக்கவும், மிக நீளமாக நிழல் மேல்கூரை, ராஜகோபுரம் வரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ கோபுரத்திலிருந்து, கோவில் கொடிமரம் வரை, பக்தர்கள் நடந்து வர, பச்சை கம்பளம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள், வெயிலின் தாக்கத்தில், எவ்வித பாதிப்பும் இல்லாமல், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் ஆனந்த் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.